மொபைல் ரீசார்ஜ் பில் ரூ.1 கோடி - அதிர்ந்து போன பெண்..!

United States of America
By Thahir Aug 06, 2023 06:33 AM GMT
Report

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு மொபைல் பில் ரூ.1 கோடி என வந்ததால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்தவர் செலினா. இவர் தன்னுடைய மொபைல் பிளானை தன்னுடைய இரு சகோதரர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தி உள்ளார்.

அதன்படி 3 பேரும் பயன்படுத்தும் மொபைல் பயன்பாட்டிற்கு செலினாவிற்கு மாதந்தோறும் பில் அனுப்பப்படும். வழக்கமாக செலினாவிற்கு வரும் மாத கட்டணமானது இந்திய மதிப்பில் 13,715 ரூபாயாகவே இருக்கும்.

அவரது 2 சகோதரர்களும் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு பயணம் செய்துள்ளார்கள். அவர்கள் கனடாவிற்கு சென்ற நேரத்தில் இருந்து இருவரது செல்போனிலும் சர்வதேச சேவைகள் செயல்பட துவங்கியுள்ளன.

இரண்டு சகோதர்களும் அதிக அளவு மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் பழக்கமுடையவர்கள் அதிலும் சர்வதேச எல்லையில் இவர்கள் அதிக அளவு டேட்டாவை பயன்படுத்திய காரணத்தினால் இவர்களின் தொலைபேசி கட்டணமானது மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச பயணங்களின் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை பற்றிய ஒப்பந்தத்தையும் செலினா இதற்கு முன்னர் படித்து பார்க்கவில்லை.

மேலும் இப்பெண்மணியின் சகோதரர்கள் இருவரும் ஒட்டுமொத்தமாக 2000க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் மற்றும் வீடியோக்களையும் டவுன்லோட் செய்து உள்ளனர்.

அதன் காரணமாக அவர்கள் பயன்படுத்திய டேட்டாவிற்கான கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.15.83 லட்சத்தை எட்டியுள்ளது. இவை அனைத்தும் நடந்து முடிந்த பின்பு அந்த மாதத்திற்கான தொலைபேசி கட்டணத்தை செலினா பார்த்தபோதுதான் அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

Mobile Recharge Bill Rs 1 Crore - Woman Shocked

அதில் இந்த மாதம் அவர் செலுத்த வேண்டிய தொலைபேசி சேவை கட்டணம் இந்திய மதிப்பில் 1.65 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து செலினா தொலை தொடர் சேவை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கட்டணத்தில் திருத்தத்தை செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதை ஏற்றுக் கொள்ள முடியாது நீங்கள் பயன்படுத்தியதற்கு தான் கட்டணம் வந்துள்ளது என்றும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

முறையாக செலினாவிற்கு தகவல் கொடுக்காமல் இருந்துள்ளது தொலைத் தொடர்பு நிறுவனம். சேவை கட்டணம் அமெரிக்கா டாலர் மதிப்பில் 2 லட்சம் டாலர்களை எட்டிய போதே அந்நிறுவனம் அவருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த அறிவிப்பையும் இவருக்கு அளிக்கவில்லை.

இது குறித்து அறிந்த மியாமி ஸ்டேஷனை சேர்ந்த குழுவினர் செலினாவிற்கு ஆதரவாக நின்று உள்ளனர். இவர்களின் தலையீட்டால் தொலைதொடர்பு சேவை நிறுவனமானது அந்த மாதத்திற்கான சேவை கட்டணத்தை 2.5 லட்சம் என்ற அளவிற்கு குறைத்துள்ளது.

மேலும் அவர் தன்னுடைய தொலைபேசி கட்டணத்தை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசமும் கொடுத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வானது தற்போது மீண்டும் இணையத்தில் மிப்பெரிய அளிவில் வைரலாகி வருகிறது.