ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

Election Erode
By Irumporai Feb 27, 2023 04:59 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

 ஈரோடு இடைத்தேர்தல்

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் களம் காண்கின்றனர்.

செல்போன் தடை

மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 52 இடங்களில் 238 வாக்குசாவடிகளும், இது தவிர கூடுதலாக 20% என்ற அடிப்படையில், 48 ரிசர்வ் மையங்கள் என மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் , தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக தேமுதிக கரை வைத்த வேட்டி சட்டைகளை அணிந்து வந்த அவருக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை | Mobile Phones Baned Inside Of The Polling Station

பின்னர் அவர் சாதாரண உடை அணிந்து மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை முன்கூட்டியே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர். தங்கள் செல்போனை யாரிடம் கொடுத்து செல்வது என்று தெரியாமல் வாக்காளர்கள் தவித்து வருகின்றனர்.  

அதே போல் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் , தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக தேமுதிக கரை வைத்த வேட்டி சட்டைகளை அணிந்து வந்த அவருக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் சாதாரண உடை அணிந்து மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.