தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் மொபைல்போன் எண் முடக்கம்: பாக்., அறிவிப்பு

vaccine pakistan mobilephone
By Irumporai Jun 12, 2021 12:56 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும்' என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் செலுத்திக்கொண்டனர்.

ஆனால், இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது

.மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.