ஆண்மைனா என்னனு தெரியுமா சீமான்?” – கொந்தளித்த சினேகா மோகன்தாஸ்!

seeman ntk mnm sneka mohandass
By Anupriyamkumaresan Sep 07, 2021 12:18 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

சமீபத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் பாலியல் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கட்சிக்குள் நுழையும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பாக வீடியோ காலில் பேசிக்கொண்டே ராகவன் சுய இன்பம் மேற்கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான உடன் ராகவனைக் கைதுசெய்யக் கோரி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

ஆண்மைனா என்னனு தெரியுமா சீமான்?” – கொந்தளித்த சினேகா மோகன்தாஸ்! | Mnm Sneka Mohandas Scold Seeman Ntk

இதனிடையே நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ராகவன் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊர், உலகத்தில் பண்ணாததையா ராகவன் பண்ணிவிட்டார்; அவரோட பிரைவசி திருடி வெளியிடுபவர்கள் தான் அசிங்கப்பட வேண்டும் என ஆதரவாகப் பேசினார். இதையடுத்து அவரை மிகக் கடுமையாக விமர்சித்து ஜோதிமணி அறிக்கை வெளியிட்டார்.

ஜோதிமணியின் இந்த கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஜோதிமணி இவ்வளவு பேச வேண்டியது இல்லை. ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ என ஒருமையில் பேசியிருந்தார். தற்போது இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி மகளிரணி மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “பல்வேறு சமூகத் தடைகள் காரணமாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய முன்வரும் மாதர்களின் சதவிகிதம் ஏற்கெனவே மிகக் குறைவு.

அப்படிப்பட்ட சூழலில், துணிந்து அரசியல் களத்திற்கு வந்த மகளிருக்குப் பாலியல் தொந்தரவு தரும் அரசியல்வாதிகள் ஒரு புறம்; அப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதோடு, பெண்களுக்காகக் குரல் எழுப்பும் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ‘செத்துப் போ’என்று பொதுவெளியில் கூறும் அரசியல் தலைவர் மறுபக்கம்.

இவையெல்லாம் மகளிரை இழிவுபடுத்தும் செயலென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்களின் சுதந்திரச் சிறகொடிக்கும் இதுபோன்ற கொடுமைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆண்மைனா என்னனு தெரியுமா சீமான்?” – கொந்தளித்த சினேகா மோகன்தாஸ்! | Mnm Sneka Mohandas Scold Seeman Ntk

வீரம் எனப் பொருள்படும் ஆண்மை, மாதரை அடிமைப்படுத்தவோ அவர்களைச் சீரழிக்கவோ கொடுக்கப்படும் உரிமைப் பத்திரம் அல்ல என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும்.

கருவிலேயே சிதைக்கப்படும் கொடுமைக்கு எதிராகப் போராடிப் பிறந்து, இறப்புவரை எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு வாழும் மரியாதைக்குரிய மகளிரின் கண்ணியம் காக்கப்பட, உரிமைகள் வென்றெடுக்கப்பட மக்கள் நீதி மய்யம் என்றும் குரல் கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.