‘’காப்பானே கள்வனான துயர சரிதை ’’ - திமுகவை அட்டாக் செய்யும் மக்கள் நீதி மய்யம்

dmk kamalhassan mnmparty
By Irumporai Dec 16, 2021 08:14 AM GMT
Report

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதம் போல இந்தாண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையாலும் ஏற்பட்டது. இதனால் கடந்த வெள்ளத்தில் அரசு கற்ற பாடம் என்ன, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றமும், அதன் மதுரைக்கிளையும் இவ்விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளது : 

அந்த பதிவில், நீர்நிலையில் அரசு கட்டடம் கட்டப்பட்டிருக்கும் படத்தை இணைத்துள்ளது. படத்தில் இருப்பது செம்மஞ்சேரி காவல் நிலையம் என்பது கவனிக்கதக்கது.

அதில், "தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது.

காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.