மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

Covid MNM Leader Kamal Hasan Affect
By Thahir Nov 22, 2021 09:48 AM GMT
Report

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என அவர் பொதுமக்களும் தனது கட்சி தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.