குருதி கொடை அவசியம் : அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் - கமல் ட்வீட்!
சர்வதேச ரத்த தான தினமான இன்று மக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[8Q0V5C[
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 14-ஆம் தேதி சர்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒரு உயிரைக் காக்க ரத்தம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று ரத்த தான தினத்தையொட்டி பல மருத்துவமனைகளில், ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ம.நீ.ம. தலைவர் கமல், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்றும் வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2021