30 லட்ச ரூபாய் கட்சி நிதிக்கு: தொண்டர்கள் அதிர்ச்சி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக 60 பேர் கட்டிய விருப்ப மனு தொகை கட்சியின் நிதிக்கு சென்றுவிட்டதாக வெளியான அறிவிப்பால் மநீம தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது, இதற்கான தொகையாக 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக 60 பேர் பணம் செலுத்தினர், ஆனால் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார், மேலும் திமுக-வுக்கு ஆதரவு தொடரும் எனவும் அறிவித்தார்.

இதனால் விருப்ப மனுவுக்காக பணம் வழங்கிய நிர்வாகிகள் மற்றும் ஏமாற்றம் அடைந்தனர், எனவே பணத்தை திரும்பி தரவேண்டும் என குரல் எழுந்தது.
இந்நிலையில் மநீம நிர்வாகிகள், விருப்ப மனு கட்டணம் என்பது திருப்பித்தரக்கூடிய கட்டணம் அல்ல (Non--refundable) என்பதும் அந்த கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும் என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
அந்த வகையில், 60 பேர் கட்டிய 30 லட்ச ரூபாய் நிதிக்கு சென்றுவிட்டது, யாரும் பணத்தை திருப்பி தருமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என தெரிவித்தனர்.
