வலியால் துடித்த கர்ப்பிணி -பிரசவம் பார்த்த அமைச்சர்!
பணி நேரத்தின் பொது மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் தும்குடேம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா . நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்க்காக பத்ராசலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அரசு மருத்துவ மனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லை. இதனால் ஸ்வப்னா பிரசவ வலியால் துடித்துள்ளார் .
இது குறித்து தெள்ளம் அமைச்சர் வெங்கடராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இவர் மருத்துவராகவும் செய்யப்பட்டு வந்தார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமைச்சர் வெங்கடராவு கர்ப்பிணி ஸ்வப்னாவை பரிசோதித்தார்.
அறுவை சிகிச்சை
அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குழந்தை பிறக்க முடியும் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் . இதற்க்கு அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்வப்னாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்து எம்.எல்.ஏ. குழந்தையை வெளியே எடுத்தார்.
ஸ்வப்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ வெங்கட்ராவுக்கு ஸ்வப்னாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து பணி நேரத்தின் பொது மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .