திமுக-வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டார்.

யார் இந்த வைத்திலிங்கம்?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டார்.
மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் முக்கிய நபராகவும் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியைக் கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.