ஆனாலும் ரொம்ப அநியாயம் பண்றாங்க : ஐஃபோனில் பிறந்தநாள் கேக் வெட்டிய எம்.எல்.ஏ மகன்

iphone mlason cakecutting
By Irumporai Sep 03, 2021 02:28 PM GMT
Report

பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் விலையுயர்ந்த ஐஃபோனில் பிறந்தநாள் கேக் வெட்டிய வீடியோ வெளியாகி விமர்சனத்தைப் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கனககிரி தொகுதியின் பாஜக எம்.எல்.எல்.ஏ-வாக பசவராஜ் உள்ளார்.

இவருடைய மகன் சுரேஷ் என்பவர் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பேட் என்ற இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சுரேஷ் என்ற அவரின் பெயர் தனித்தனியாகப் பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கை சுரேஷ் விலையுயர்ந்த ஐஃபோனை கத்திபோல் பிடித்துக்கொண்டு வெட்டினார் .

ஆனாலும் ரொம்ப அநியாயம் பண்றாங்க :   ஐஃபோனில் பிறந்தநாள் கேக் வெட்டிய எம்.எல்.ஏ மகன் | Mla Son Cutting Birthday Cake Iphone

அவர் ஐஃபோனில் பிறந்தநாள் கேக் வெட்டிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் 'தன் மகன் அவன் சம்பாதித்த பணத்தில்தான் அவனுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதில் என்ன தவறு இருக்கிறது' என மகனின் செயலை நியாயப்படுத்தியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ பசவராஜ்.