கல்லூரி முதல்வருக்கு பளார் விட்ட MLA : ஆய்வுக்கு சென்ற போது அத்துமீறல்

Viral Video India
By Irumporai Jun 22, 2022 10:40 AM GMT
Report

ஆய்வுக்காக சென்ற எம்.எல்.ஏ கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியின் எம்.எல்.ஏவாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த ஸ்ரீனிவாஸ் இருந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள நல்வேதி கிருஷ்ணராஜ கல்லூரிக்கு கடந்த 20ம் தேதி ஆய்வுக்காக சென்றுள்ளார்.

ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ

அப்போது அங்குள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கம்ப்யூட்டர் ஆய்வகம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார்.

கல்லூரி முதல்வருக்கு பளார் விட்ட MLA : ஆய்வுக்கு சென்ற போது அத்துமீறல் | Mla Slaps College Principal In The Cheek

முதல்வர் கண்ணத்தில் அறை

அதற்கு கல்லூரி முதல்வர் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கருதிய எம்.எல்.ஏ அனைவர் முன்னிலையிலும் கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அடித்துள்ளார்.

கல்லூரி பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் முன்னிலையில் எம்.எல்.ஏ இவ்வாறு நடந்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்லூரி முதல்வரை எம்.எல்.ஏ தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.   

இந்த விடியோவை பகிர்ந்த சிலர் எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அடித்து எம்.எல்.ஏவின் செயல் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.