“அப்படிப்போடு...போடு” - ஆந்திராவில் தப்பாட்டம் ஆடி மகிழ்ந்த நடிகை ரோஜா

RK Roja MLA Andhra pradesh
By Petchi Avudaiappan Aug 04, 2021 08:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆந்திராவின் நகரி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ரோஜா தப்பாட்டம் ஆடி மகிழ்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா, தமது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக புத்தூரில் உள்ள 72 தப்பாட்ட கலைஞர்களுக்கு தப்பு, கொலுசு, உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது உற்சாக மிகுதியில் தப்பாட்ட கருவியை எடுத்து குச்சியால் அடித்து ரோஜா ஆடினார். அவருடன் கலைஞர்களும் அதேபோல் தப்பாட்டம் ஆடினார்கள். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.