இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பரான எம்.எல்.ஏ அதிரடி கைது

Gujarat
By Swetha Subash Apr 21, 2022 07:17 AM GMT
Report

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய குற்றத்திற்காக குஜராத் எம்.எல்.ஏ-வும் தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பருமான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலத்தின் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜிக்னேஷ் மேவானி.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பரான எம்.எல்.ஏ அதிரடி கைது | Mla Jiknesh Mevani Arrested By Assam Police

இந்த வெற்றியின் மூலம் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்ற அவர் சமூக ஊடகங்களில், இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை பரப்பிய குற்றத்திற்காக பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து நேற்றிரவு அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் இன்று காலை அசாமுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் பரப்பிய பதிவுகள் நீக்கப்பட்டது.

மேலும், எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பரான எம்.எல்.ஏ அதிரடி கைது | Mla Jiknesh Mevani Arrested By Assam Police

இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.

சென்னையில் பா.ரஞ்சித் நடத்திய நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.