திமுக கட்சிக்கு எதிராக செயல்பட்ட MLA ஐயப்பன்! கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

dmkiyappanexpelled mlaiyappan
By Swetha Subash Mar 06, 2022 12:49 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கடலூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக கட்சியின் பொது செயலர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சி தேர்தலில் திமுகவின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும்

கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திமுக தலைமை கழகம் விளக்கம் அளித்துள்ளது.

கடலூர் மாநகராட்சி மேயர் யார் என்ற போட்டியில் திமுக கட்சியினருக்குள்ளேயே கடும் போட்டி நிலவியது.

இரு அணிகளாக மறைமுகமாக செயல்பட்டு இறுதியில் தலைமை அறிவித்த வேட்பாளரை ஏற்க இயலமால் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கவுன்சிலர்களை கடத்தி குளறுபடி ஏற்படுத்தியதாக

திமுக வட்டார தகவல்களே தலைமைக்கு புகார் அனுப்பினர். நகர செயலாளரின் மனைவி மேயர் ஆக கூடாது என்ற வகையில் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படுத்தியுள்ளனர்.

கடலூர் ஐயப்பன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கோவம் கொண்டு திமுகவிற்கு எதிராகவே சவால் விட்டவர்.

தற்போது தனது ஆதரவாளருக்கு மேயர் பதவி இல்லை என்ற போது ஆவேசப்பட்டு செய்த செயலை திமுக கட்சி தலைமைக் குழு கண்டித்ததோடு அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்தே தற்காலிகமாக நீக்கி உள்ளது.

ஆனால் நிரந்தரமாக அவரை நீக்கினால் மட்டுமே கடலூர் திமுக வலுவாக நிற்கும் என திமுக தரப்பு நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.