சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு?
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமியை காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மூன்றுபேரில் ஒருவர் எம்.எல்.ஏவின் மகன் என்பதும், ஒருவர் சிறுவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
அவர்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 376 (கூட்டுப் பாலியல் பலாத்காரம்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தெலுங்கானா மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.