தவெக எம்.எல்.ஏ. இளையராஜா பேரம் வழக்கு: 3 பேரை சிறையில் அடைக்க உத்தரவு

Tamil nadu Law and Order TVK
By Vinoja Jul 01, 2026 10:46 AM GMT
Report

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு, ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, திருநாவுக்கரசு என்பவர் இளையராஜாவை தொடர்புகொண்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக செயல்பட்டால், அதற்காக 35 கோடி ரூபாய் வழங்கப்படும் என பேரம் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றர்.

தவெக எம்.எல்.ஏ. இளையராஜா பேரம் வழக்கு: 3 பேரை சிறையில் அடைக்க உத்தரவு | Mla Ilayaraja Bribery Case 3 In Judicial Custody

இதுதொடர்பாக, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் இளையராஜா புகார் கொடுத்தார். அதில், தனக்கு லஞ்சம் வழங்க முயற்சித்ததுடன், தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.


புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நரேஷ், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.