"ஆக"... அதிமுக கூட்டத்தில் ஒலித்த ஸ்டாலின் குரல் - ஆர்ப்பரித்த தொண்டர்கள் , நடந்தது என்ன?

cmstalin mimicry mlagovindasamy
By Irumporai Dec 18, 2021 12:52 PM GMT
Report

தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின் போல் மிக்கிரி செய்து திமுக அரசை விமர்சிக்கும் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தருமபுரியில் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் , அம்மா மினி கிளினிக்குகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் wஇறைவேற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தர்.

முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி, அரூர் எம்.எல்.ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி முதலமைச்சர் ஸ்டாலினைப் போல் மிமிக்ரி செய்தார். முன்னதாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குவதற்காகவே, திமுக அரசு பொய் வழக்குகளைப் போட்டு பயமுறுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எடப்பாடி ஒரு கோடி ரூபாய் வழங்குவாறா எனக்கூறிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அதை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறினார்.

இதனை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது திமுக கட்சி மேடையில் பேசியதைப் போல் மிமிக்ரி செய்து காட்டினார்.