மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ - அரசு பள்ளியில் பரபரப்பு!

Tamil nadu Salem
By Jiyath Jan 25, 2024 04:50 AM GMT
Report

மாணவர்களின் காலில் விழுந்து எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்குவாதம் 

சேலம் மாவட்டம் பாகல்பட்டி அரசு பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டார்.

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ - அரசு பள்ளியில் பரபரப்பு! | Mla Fell At The Feet Of Students And Apologized

அப்போது வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியது இருப்பதால், தான் பேசிவிட்டு செல்வதாக கூறி எம்.எல்.ஏ. அருள் பேச தொடங்கினார். இதனையடுத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அப்போது 'எங்களை பேச அழைக்காமல் எப்படி சைக்கிள் வழங்கலாம்' என்று கூறி அங்கிருந்த பாகல்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் ராஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மன்னிப்பு

இதனால் அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ - அரசு பள்ளியில் பரபரப்பு! | Mla Fell At The Feet Of Students And Apologized

திடீரென எம்.எல்.ஏ. அருள் விழுவதாக கூறி மாணவ-மாணவிகள் முன்பு தரையில் விழுந்து அங்கு நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். இதைப்பார்த்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சியால் எழுந்து நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.