கழிவறையில் தூய்மை பணி செய்த எம்.எல்.ஏ - காரணம் இதுதானா?
C. T. Ravi
Member of the Legislative Assembly
cleaning toilet
By Anupriyamkumaresan
4 years ago
சிக்மகளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காந்தி ஜெயந்தி விழா கொஞ்சம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதில் எம்.எல்.ஏ. சி.டி. ரவி, மாவட்ட கலெக்டர், மேல்சபை துணை சபாநாயகர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பிறகு அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி, அந்த சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தின் உள்ளே உள்ள கழிவறையை கழுவி சுத்தம் செய்தார்.
மேலும் இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையிலேயே நான் இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.