கருப்பு பூஞ்சை நோய்க்கு 30000 மருந்து குப்பிகள் வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
கருப்பு பூஞ்சை நோய்க்கு 30 ஆயிரம் மருந்து குப்பிகள் வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே கருப்பு பூஞ்சை நோய்க்கு எதிராக சிகிச்சை அளிக்கும் வகையில் அதற்கு தேவைப்படும் மருந்துகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் 30 ஆயிரம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.