சிஎஸ்கே ஜெர்சி அணிந்து ஐபிஎல் போட்டியை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிஎஸ்கே ஜெர்சி அணிந்து ஐபிஎல் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் தமிழிசை கண்டு களித்துவருகின்றனர்.
ஐபிஎல் போட்டி
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளிக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றைய தினம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த போட்டியை பார்வையிடுவதற்காக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரில் வந்துள்ளனர். தோனியின் தீவிர ரசிகரான முதலமைச்சர் முக ஸ்டாலின் சிஎஸ்கே அணியின் ஜெர்சி அணிந்து குடும்பத்துடன் போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
அதேபோல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் போட்டியை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.கே ஜெர்சி அணிந்தவாறு மைதானத்திற்கு வருகை தந்து போட்டியை பார்வையிட்டார்.