சென்னையில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம் - முதலமைச்சர் நேரில் ஆய்வு
சென்னையில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் மிகத் தீவிரமாக நடைபெற்ற் வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்ததால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனிடையே மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்தார்.
மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்தார். அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார்.
பின்னர் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெறியேற்றும் பணி குறித்தும் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.