காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அரண்டுபோன காவல்துறையினர்
சேலம் பயணத்தை முடித்துக்கொண்டு தருமபுரி செல்லும் வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதியமான்கோட்டை பி2 காவல் நிலையத்தில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை தருமபுரி செல்கிறார்.
இதற்காக சேலம் பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை மாலை தருமபுரி செல்லும் வழியில் அதியமான்கோட்டை பி2 காவல் நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விசாரித்தார்.
முன்பு ஒருமுறை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.