“இது என் அரசல்ல... உங்களின் அரசு” - 100வது நாளில் நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்

mkstalin tngovernment 100DaysOfDMKGovt
By Petchi Avudaiappan Aug 14, 2021 07:48 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பதவியேற்றார்.

முதல்நாளே ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தினார். தொடர்ந்து பல திட்டங்களும் இந்த 100 நாட்களில் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 10 ஆண்டுகளாகத் தாழ்ந்து கிடந்த தாய்த்தமிழ்நாட்டின் மீட்சியாக மிடுக்குடன் நூறாவது நாளில் கழக அரசு அடியெடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 100 நாட்கள் அளித்த உற்சாகத்தோடு நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். இது என் அரசல்ல என்றும், உங்களின் அரசு, உங்களில் ஒருவனின் அரசு எனவும் கூறியுள்ளார்.