மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மை உடன் திமுக ஆட்சி அமைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஸ்டாலினுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது மே 7-ம் தேதி ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\