திருப்பூரில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்த பிரசாரத்தை பொதுமக்கள் நேரடியாக காணும் வகையில் 102 இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
காணொலி காட்சி மூலமாக கடந்த 6-ந்தேதி முதல் கோவை, சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று திருப்பூர் மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 440 வேட்பாளர்களை ஆதரித்து மாலை 4 மணி முதல் பிரசாரம் செய்யவுள்ளார்.