கொடநாடு கொலை விவகாரம் ... குதிருக்குள் இல்லை என்பதுபோல அதிமுகவினரின் செயல்பாடு உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

mkstalin tnassembly kodanadumurder
By Irumporai Aug 18, 2021 10:35 PM GMT
Report

கோடநாடு வழக்கில் என் பெயரையும் முன்னாள் அமைச்சர்கள் பெயரையும் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை மீண்டும் கூடியது. அப்போது கோடநாடு கொலை வழக்கில் அரசு விசாரணை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அதிமுகவினர் வெளியேறிய நிலையில் பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுகிறது திமுக அரசு. அரசின் செயலை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

எதிர்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. அதிமுகவை செயல்படவிடாமல் நசுக்க முயற்சிக்கிறது திமுக அரசுகுற்றஞ்சாட்டினார் .

அதிமுகவினர் வெளிநடப்பு குறித்து பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின் அதிமுக உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதற்கு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல அதிமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறது. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.