’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ - தமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறுகிறது.
ஸ்டாலின் உடன் 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவியேற்றுக் கொள்கிறது. ஆளுநர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஸ்டாலின் பதவியேற்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் மிகக் குறைவான அளவில் மட்டுமே விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட பிறகு இன்று மாலை முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதோடு ஸ்டாலின் சில முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட உள்ளார்.