பெரியார் சாலை பெயர் மாற்றம் : எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா மு.க.ஸ்டாலின்
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையினை Grand Western Trunk Road என மாற்ற காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் சாலை மாற்றியது தொடர்பாக தி .மு. க தலைவர் மு.க.ஸ்டாலின் தனந்து ட்வீட்டர் பதிவில்: சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல வந்தாலும் அந்தப் பெயரே இருந்து வந்தது . இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதுகடும் கண்டனத்திற்குறியது .
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? என கேள்வியெழுப்பியுள்ள ஸ்டாலின்.
அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?
எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன்.
தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க என மு.க ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?
உடனடியாக மாற்றிடுக!
தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! pic.twitter.com/luDmTSD1YT