திமுக பிரச்சார பாடலுக்கு இசையமைத்தவர் திருமண வரவேற்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சட்டமன்ற தேர்தலில் திமுக பிரச்சார பாடலுக்கு இசையமைத்த ஜெரார்டு பெலிக்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவின் பிரச்சார பாடலாக "ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தரும் போறாரு" என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.
அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பாடலாக அமைந்த இதற்கு ஜெரார்டு பெலிக்ஸ் என்பவர் இசையமைத்திருந்தார். இதனிடையே ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமை கூடை வணங்கி வாழ்த்து தெரிவித்தார்.