கோவை கொடிசியாவில் கொரோனா மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

stalin coimbatore coronacentre
By Irumporai May 20, 2021 03:30 PM GMT
Report

கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.

இன்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர்  சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர் சோதனை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களிடம் அவர் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது கோவை மாவட்டத்திற்கு பயணம் செய்த மு.கஸ்டாலின் கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

கோவை கொடிசியாவில் கொரோனா மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | Mkstalin Opened Kodicia Corona Center Coimbatore

. கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக  உள்ளது.

கோவையில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது.