கருணாநிதியின் நண்பரை சந்தித்த ஸ்டாலின் - உதயநிதி :திருவாரூரில் நடந்த சுவாரஸ்யம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர் புலிவலம் ஆர்.பி.சுப்பிரமணியனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
திருவாரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் ஒன்றிய கழகத்தின் செயலாளராக பணியாற்றியவர் - முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பர் திரு.புலிவலம் ஆர்.பி.சுப்பிரமணியன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து நலம் விசாரித்தோம். சுப்பிரமணியன் அவர்களின் கழகப்பணியை என்றென்றும் போற்றுவோம். நன்றி. pic.twitter.com/Wlhx1a5fpy
— Udhay (@Udhaystalin) July 7, 2021
பின்னர் திருவாரூர் ஒன்றிய கழகத்தின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரான புலிவலம் ஆர்.பி.சுப்பிரமணியனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.