காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலின் கடிதம்

By Petchi Avudaiappan Jun 11, 2021 05:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில்  மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் நாளை மேட்டூர் அணையிலிருந்து எங்களுடைய அரசு தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளது. இதனை பொறுத்தே காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

காவிரியில் நீர் திறக்கப்படாவிடில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.