பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் இ.எம்.ஐ செலுத்த அவகாசம் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த ஆறு மாதம் அவகாசம் தரவேண்டும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.
ஆறு மாத காலத்திற்கு வட்டி எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்க வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதி, ஈட்டுறுதி தொகையை 6 மாதங்களுக்கு பிடித்தம் செய்யக் கூடாது'' என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்
[