முதல்வராக மகிழ்கிறேன்...மகனாக நெகிழ்கிறேன்.. மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என கருணாநிதி திருவுருவபடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் சட்டப்பேரவையில் திறந்து வந்தார். பின் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய குடியரசு தலைவர் ராம்நாத், கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என தெரிவித்தார்.இந்த சட்டசபையில்தான் மகளிர் நலன் காக்கும் சிறப்பான சட்டங்கள் நிறைவேற்றியுள்ளார் கருணாநிதி.
அது மட்டுமல்ல மே தினத்தை விடுமுறையாக அறிவித்தவரும் கலைஞர் தான். சீர்திருத்த திட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதல்வர் ஆகிய பல பதவிகளை வகித்தவர் கருணாநிதி.
கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததை கண்டு முதல்வராக மகிழ்கிறேன். மகனாக நெகிழ்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.