மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட "மின்னகம்" என்ற சேவை மையத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில்,பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட "மின்னகம்"
என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்.பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின் துறை சார்ந்த புகார்களை
24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைத்து அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி,நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.