முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வயசானாலும் ஸ்டையிலும் அழகும் குறையவில்லை: மாஸ்கை கழற்ற சொன்ன பெண் புகழாரம்!

MK Stalin viral video Lady Talk
By Thahir Aug 07, 2021 03:18 AM GMT
Report

சூப்பரா இருக்கீங்க சார் நீங்க. எவ்வளோ வயசானாலும் உங்க ஸ்டையிலும் அழகும் குறையல முதலமைச்சரை புகழ்ந்து தள்ளிய பெண்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வயசானாலும் ஸ்டையிலும் அழகும் குறையவில்லை: மாஸ்கை கழற்ற சொன்ன பெண் புகழாரம்! | Mkstalin Cm Viral Video Lady Talk

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கி வைக்க கான்வாயில் சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்தும்படி சைகை காட்டினார். இதனைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் காரை நிறுத்த சொல்லி கார் கண்ணாடியை இறக்கினார்.

அப்போது சாலையோரம் நின்றிருந்த அந்த பெண் முதல்வரை கண்டு, “உங்க முகத்தை நேர்ல பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை, மாஸ்க்கை ஒரு நிமிஷம் கழற்றுங்க முகத்தை பார்த்துகிறேன்” எனப் பார்த்துவிட்டுச் சென்றார். இந்த சூழலில் முதல்வர் முக ஸ்டாலின் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அந்த பெண்ணின் பெயர் ரம்யா. இந்த சூழலில் ரம்யா முதல்வருடன் செல்போனில் பேசியபடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “நிறைய பண்ணணும் சார். ரோடு மட்டும் நல்லா போட்டீங்கனா தமிழ்நாடு எங்கயோ போகிறும் சார்.

நீங்க மக்கள் முதல்வரா இருங்கீங்க சார். உங்க கிட்ட இவ்வளோ க்ளோசா பேச முடியும்னு நா நினைச்சுக்கூட பாக்கல சார். அருமையான ஆட்சி சார் இது. நிறைய வருஷத்திற்கு இப்படியே கண்டினியூ(ஆட்சி) ஆகணும் சார்.

ஐயா(கருணாநிதி) மட்டுதான் 11 வருஷம் முதல்வரா இருந்திருக்காரு, அடுத்து நீங்கதான் அந்த ரெக்கார்ட பிரேக் பண்ணணும்”, எனச் சொல்லிக் கொண்டிருந்த அவர் வெக்கப்பட்டபடி, “சூப்பரா இருக்கீங்க சார் நீங்க. எவ்வளோ வயசானாலும் உங்க ஸ்டையிலும் அழகும் குறையல சார்...” என்றார். என தனது மகளிடம் கொடுத்தபடி அந்த வீடியோ சென்றது.