“சார் மாஸ்க் எடுங்க எப்போ சார் பாக்குறது” - புன்னகையுடன் மாஸ்க்கை கலட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றார்.இந்த நிலையில் இன்று காலை மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் செல்லும் வழியில் காத்திருந்த பெண் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் வருவதை கண்டு மகிழ்ச்சியடைந்தார் இதை கண்ட முதலமைச்சர் வாகனம் நின்றது.
அப்போது அந்த பெண் “சார் மாஸ்க் எடுங்க எப்போ சார் பாக்குறது மாஸ்க்கை கழட்டுங்க ” என்றார் உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஸ்க்கை கழட்டி சிரித்தார்.பின்னர் அந்த பெண் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அதற்குப் பெயர் ஸ்டாலின் என்று கூறினார். சிரித்துக்கொண்டே அதை கூறிய பெண்களை பார்த்தார்.பின்னர் அவர்களின் கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.