மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த கூடாது முதல்வர் உத்தரவு..அமைச்சர் செந்தில்பாலாஜி
கடந்த ஆட்சியில் செயல்படுத்தாத நிலுவையில் உள்ள திட்டங்களை கேட்டறிந்து அதனை செயல்படுத்து வதற்கான வழிவகை செய்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆட்சியில் ஒன்பது மாதம் பராமரிப்பு வேலை செய்யப் பட்டதா இல்லையா என்று சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்க்கட்சி பதில் கூறவில்லை.
கடந்த ஆட்சியாளர்கள் அவர்களுடைய நிர்வாகம் சரியாக செய்யாததால், அவர்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு தான் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது யார் பொறுப்பில் இருந்தார்களோ அவர்கள்தான் இந்த நஷ்டத்திற்கு பொறுப்பு. 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் மின் தேவைகள் அதிகமாக இருந்தது.
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் புதிய மின் திட்டங்களை கொண்டு வந்தார்.அந்தக் காலகட்டத்திலும் ஐந்து வருடத்திற்கு தனியாரிடம் பெறப்பட்ட மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு பெறப்பட்ட தொகை 3 ரூபாய் 58 பைசா. கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை. தனியாரிடம் இருந்து பெறப்பட்ட மின் கொள்முதல் அதிகரித்துள்ளது. 2016 இல் இருந்து 21 வரை தனியாரிடம் பெறப்பட்ட மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு தரப்பட்ட தொகை ஐந்து ரூபாய் 1 பைசா.
சொந்த உற்பத்தியை அதிகரிக்காமல் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது இதுதான் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பணிகளை செய்ய தவறுவதால் ஏற்பட்ட நஷ்டங்கள் தான் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உங்களுடைய ஒதுக்கீடு தொகை எவ்வளவு என கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தாத நிலுவையில் உள்ள திட்டங்களை கேட்டறிந்து அதனை செயல்படுத்து வதற்கான வழிவகை செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.