வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
சட்டத்தின் ஆட்சியை பின்பற்றி நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் விழா இது.
இந்திய மக்களின் மனசாட்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மக்களின் நம்பிக்கை பெற்றவராக உள்ளார்.
மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்புகள் உள்ளது. வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கோரிக்கை விடுத்தார்.