கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

CM MK Stalin Tamilnadu
By Thahir Sep 13, 2021 05:54 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு | Mkstalin Cm Tamilnadu

இது குறித்து அவர் பேசுகையில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது.