நீண்ட நாட்களுக்கு பின் சைக்கிளிங் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்!!

CM MK Stalin Tamilnadu
By Thahir Jul 04, 2021 05:19 AM GMT
Report

ஈ.சி.ஆர் சாலையில் இன்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நீண்ட நாட்களுக்கு பின் சைக்கிளிங் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்!! | Mkstalin Cm Tamilnadu

திமுக தலைவர் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிளிங் பயணத்தை விடாமல் செய்து வருகிறார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை சுற்றி சிலர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின் சைக்கிளிங் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்!! | Mkstalin Cm Tamilnadu

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அருகே சென்ற இளைஞர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது பொதுமக்களை சந்தித்த முதல்வர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.