தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக ஆக வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin Palanivel Thiagarajan
By Thahir Jul 02, 2021 08:49 AM GMT
Report

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக ஆக வேண்டும்,பின் தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக்கூடாது என மாநில வளர்ச்சிக் கொள்கையின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக ஆக வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் | Mkstalin Cm Tamilnadu

தலைமைச் செயலகத்தில்,மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழநாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும் என்றும் பின்தங்கிய சமூகம்,பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக் கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள்,பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத,நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல் ஒவ்வொரு துறையிலும் தேவை என்று பேசிய அவர்,

மேலும்,பொருளாதார வளர்ச்சியும்,சமூக நலத்திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்றார்.தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி,இறக்குமதி மட்டும் அல்ல - நிதி மூலதனம் அல்ல - வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.மாநில வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு,தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும்.என்றுமு் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.