கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வாங்குவதற்காகவும், இந்த தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 100 ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
ஆர்டிபிசிஆர் கிட்டுகளை வாங்குவதற்கு 50 கோடி ரூபாய் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு 41.40 ரூபாயினையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.