இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் முதல்வருடன் சந்திப்பு!
MK Stalin
Tamilnadu
CMO
By Thahir
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று 50வது நாளை கடந்துள்ள நிலையில் பல்வேறு ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள் முதலமைச்சரை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.இதில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ரங்கராஜன் பேசியதாக கூறப்படுகிறது.