தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் கார சார விவாதம் இன்றுடன் முடிகிறது!
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழக சட்டப் பேரவை முதல் கூட்டத் தொடர் கடந்த திங்கள் கிழமை ஆளுநர் உரையிடன் தொடங்கியது.இதையடுத்து இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடைசி நாளான இன்று
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.
இது தவிர, அரசுத்துறையின் செலவினங்களை ஆய்வு செய்து மத்திய அரசின் தணிக்கைத் துறை அளித்த
அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கலானது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி! Manithan
