முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க ரகுராம் ராஜன் தலைமையில் குழு அமைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழு அமைப்பு.
தமிழக சட்டசபையின் 16-வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையில் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க, 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்' என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் விவரம் பின்வருமாறு:-
1. ரகுராம் ராஜன் - இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்
2. எஸ்தர் டப்ளோ - நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர்
3. அரவிந்த் சுப்ரமணியன் - மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
4. ஜீன் ட்ரெஸ் - ராஞ்சி பல்கலைக்கழகம்; டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்
5. நாராயணன் - மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
