தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பொருளாளர் பிரேமலதா துணை செயலாளர் எல் கே சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருந்தார், அதனை தொடர்ந்து மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.