ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ₹3 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று (Coronavirus) பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேரு விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
அப்போது உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற டீம் ஸ்பிரிட் மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள் வெற்று பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் குழுவாக இணைந்து செயல்படும் போது முழு வெற்றியை பெற முடியும். விளையாட்டு துறைக்கு அரசு என்றுமே துணை நின்று ஊக்கமளிக்கும்.” என்றார்.